இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
மகர ராசிக்கு குரு 12வது மற்றும்
3வது வீட்டிற்குரியவர் ஆவார். 3வது வீடு என்பது ஒரு நல்ல வீடும் இல்லை அதே போல தீய
வீடும் இல்லை. ஆனால் 12வது வீடு ஒரு கெடுதலான ஸ்தானம் ஆகும். மேலும் மகர ராசியின்
அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆக குரு நல்ல வீட்டில் இருந்தால் சற்று
நல்ல பலனையும் தீய இடத்தில இருந்தால் சற்று அதிகமான தீய பலனையும் மகர ராசிக்கு
வழங்குவார். ஆக குரு இருக்கும் இடம் மகர ராசிக்கு மிகவும் முக்கியம்
வாய்ந்தது.
இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன
ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை
எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில்
பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ராசி என்பது மகர ராசிக்கு மிகவும்
தீமையை தரக்கூடிய 6வது வீடு ஆகும். மேலும் 12வது வீட்டிற்க்கு 7வது இடத்திலும்,
3வது வீட்டிற்கு 4வது இடம் என்று மேலும் பலம் இல்லாத ஒரு நிலையில் குரு
உள்ளது.
இந்த வருட குரு பெயர்ச்சி மகர
ராசிக்காரர்களுக்கு இது வரை இருந்து வந்த மிக யோகமான பலனை சற்று அதிகமாக குறைக்க
கூடும். 2014 ஐப்பசி வரை சனி பெயர்ச்சியால் கிடைக்க வேண்டிய நல்ல பலனையும் சேர்த்து
இந்த குரு பெயர்ச்சி குறைத்து விடும். ஆக மகர ராசியினர் புத்திசாலிதனமாக நடந்தால்
இது வரை கிடைத்து வந்த லாபத்தை காப்பாற்றலாம். இல்லை என்றால் இதுவரை கிடைத்த
லாபத்தை சேர்த்து மொத்தமாக இழக்கும் சூழ்நிலை உருவாகி விடும். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின்
பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின்
பலன்கள்:
கட்டுக்குள் அடங்காமல் செல்லும் செலவு
வகைகளை மகர ராசியினர் சற்று போராடி வெற்றி பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் சகோதர
உறவுகளில் பிரச்சினைகள் இருந்தாலும் மகர ராசியினர் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட்டு
வெற்றியும் அடைவார்கள். மேலெழுந்தவாறு மனதில் தளர்வு ஏற்பட்டாலும் உள் மனதில்
நம்பிக்கையை வளர்த்து கொள்வார்கள். கடுமையான வேலைகளுக்கு இடையில் போதிய அளவு
ஓய்வும் கிடைக்கும்.
08.06.2013 முதல்
02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் மகர ராசி மற்றும் மகர இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
அதிகப்படியான செலவுகள் மகர ராசியினரை கடன் வாங்கி சரி கட்ட வைக்கும். நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகள் மிகவும் பாதிப்பு அடையும். உறவுகளில் விரோதங்கள் உண்டாகலாம். உள் மனதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்து எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். மகர ராசியினர் கவுரவ இழப்புக்கு ஆளாக நேரிடலாம். சரியான ஒய்வு, நேரப்படி உணவு இல்லாமல் சற்று சிரமப்பட நேரிடலாம்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மகர ராசியினர் கடுமையாக போராடி செலவுகளை கட்டுக்குள்
கொண்டு வருவார்கள். மேலும் சகோதர உறவுகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இருந்து
வரும் சில பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் வெற்றியும் பெறுவார்கள். இழந்த கவுரவம்
சிலவற்றை திரும்ப பெறுவார்கள். மகர ராசியினருக்கு தேவைப்படும் அளவு ஓய்வும் நல்ல
உணவும் கிடைக்கும்.
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
செலவுகள் மகர ராசியினரை சற்று திக்குமுக்காட வைத்து விடும். செலவுகளால் ஏற்பட்ட பண நெருக்கடியை கடன் வாங்கி சிலர் சமாளிப்பார்கள். அல்லது கடன் வாங்கி செலவு செய்ய தொடங்குவார்கள். மனதில் சற்று நிம்மதி இழந்து சரியான ஒய்வு மற்றும் நல்ல உணவு இல்லாமல் இருக்க நேரிடும். சகோதர மற்றும் நண்பர்கள் மத்தியில் விரோதம் பாராட்டுவதோ அல்லது உறவில் பெரிய அளவு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மகர ராசியினரின் செய்கைகள் அவர்களுக்கு மதிப்பு குறைவை உண்டாக்ககூடும்.
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
இது வரை இருந்த நிலைமை சற்றே சீர் அடையும். மகர ராசியினர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி அனைவரிடமும் சற்று நிதானமாக நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். செலவுகள் சிலவற்றை கட்டுகுள் கொண்டு வர ஆரம்பிப்பார்கள். ஆனால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மகர ராசியினர் செலவுகளை கட்டுபடுத்த எடுத்த முயற்சிகள் பலன் அளிக்க ஆரம்பிக்கும். மீண்டும் சகோதர மற்றும் நண்பர்கள் விசயங்களில் நீடித்த விரோத மனப்பான்மை சற்று குறைய ஆரம்பிக்கும். மகர ராசியினர் மதிப்பு மரியாதையை காபாற்றும் விதத்தில் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் செயல் ஆற்ற தொடங்குவார்கள். போதிய அளவு ஓய்வும் சரியான நேரத்திற்கு உணவும் பெற்று நிம்மதியை சற்று பெறுவார்கள்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மீண்டும் புதிய செலவுகள் உண்டாகும். மனதில் சற்று தளர்வு ஏற்பட வாய்ப்புண்டு. வேலையால் ஏற்படும் அழுத்தத்தால் சரியான ஓய்வும், உணவும் இல்லாத நிலை ஏற்படும். சகோதர மற்றும் நண்பர்கள் உறவில் சற்று வித்தியாசங்கள் தோன்ற தொடங்கும்.
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.

8.11.2013 முதல்
21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
மகர
ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே
மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள்
நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று
மாறுபட்டு நடைபெறும்.
4.
குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை
என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
5.
நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய
துன்பங்கள் நடக்காது.
6. மகர ராசியினருக்கு 3வது அல்லது 11வது இடத்து அதிபதி அல்லது செவ்வாய் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானங்களில் இருந்தால், சகோதர மற்றும் நண்பர்கள் உறவுகளில் பெருத்த பதிப்பை அடையும்.
7. மகர ராசியினருக்கு 1வது அல்லது 3வது அல்லது 4வது இடத்து அதிபதி திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானங்களில் இருந்தால், மரியாதை குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
8. மகர ராசியினருக்கு 2வது அல்லது 6வது வீட்டு கிரகம் அல்லது குருவின் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் பண பரிவர்த்தனை அல்லது கடன் பிரச்சினைகளால் துன்பபட வாய்ப்பு உண்டு.
9. மகர ராசியினருக்கு 12வது வீட்டு கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்து திசை நடத்தினாலோ அல்லது 12வது வீட்டு கிரகம் பகை அல்லது நீச்சத்தில் இருந்தால் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருந்து அதனால் பல துன்பத்திற்கு ஆழகாக நேரிடும்.
10. மகர ராசியினருக்கு 3வது வீட்டு கிரகம் அல்லது லக்கினம் அல்லது சந்திரன் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், மனதில் கடுமையான சஞ்சலங்கள் தோன்றி துன்பபடுத்தும்.

11 குருவின் பலமற்ற பார்வை 10வது, 12வது மற்றும் 2வது வீட்டில் விழுகின்றது. இதனால் மகர ராசியினருக்கு பண பரிவர்த்தனைகள் எல்லை மீறி செல்லாது.
12. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.
குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற
வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக
கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு
கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay
Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று
கொள்ளலாம்.
Comments
Post a Comment