இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மகர ராசிக்கு குரு 12வது மற்றும் 3வது வீட்டிற்குரியவர் ஆவார். 3வது வீடு என்பது ஒரு நல்ல வீடும் இல்லை அதே போல தீய வீடும் இல்லை. ஆனால் 12வது வீடு ஒரு கெடுதலான ஸ்தானம் ஆகும். மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆக குரு நல்ல வீட்டில் இருந்தால் சற்று நல்ல பலனையும் தீய இடத்தில இருந்தால் சற்று அதிகமான தீய பலனையும் மகர ராசிக்கு வழங்குவார். ஆக குரு இருக்கும் இடம் மகர ராசிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசிய...